Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மல்லிகை பூக்களுக்கு சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு நிதி ஒதுக்கீடு!

Mahendran
சனி, 15 மார்ச் 2025 (11:06 IST)
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 2025-26ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று   தாக்கல் செய்து வரும் நிலையில்  மதுரை மல்லிகை பூக்களுக்கு சிறப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது:
 
"மலர் சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகளுக்கு தினசரி வருமானத்தை உறுதி செய்ய ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மல்லிகை திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடிகள் வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், ரோஜா மலர் சாகுபடிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிக், மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
 
பாரம்பரிய காய்கறி சாகுபடியை மேம்படுத்த ரூ. 2.40 கோடி நிதியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து விற்பனை செய்ய கிடங்குகளை அமைக்க மானியமாக ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் காய்கறி விதைத்தொகுப்புகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடி தொகுப்புகள், 1 லட்சம் இல்லங்களுக்கு பயிர் விதை தொகுப்புகள் வழங்கப்படும்.
 
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க, ஊரக பகுதிகளில் 5 புதிய காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments