Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசலை தெறிக்கவிடப்போகும் காளைகள்.. ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு..!!

Senthil Velan
வியாழன், 4 ஜனவரி 2024 (15:36 IST)
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
 
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் தைத்திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த வருடமும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ஆம் (திங்கட்கிழமை) தேதியும், பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ஆம் (செவ்வாய் கிழமை) தேதியும் மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17-ஆம் (புதன் கிழமை) தேதியும் நடைபெறவுள்ளது.
ALSO READ: திருமண மண்டபத்தில் கைவரிசை..! தங்க நகை திருடிய நபர் கைது..!!
 
வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

அடுத்த கட்டுரையில்