கொடியேற்றத்துடன் துவங்கியது மதுரை சித்திரை திருவிழா!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (11:22 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சற்று முன் விமர்சையாக துவங்கியது. 

 
இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டுவிட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 12 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13 ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.
 
மேலும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அதனையடுத்து வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments