Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரமுத்து மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்பு

வைரமுத்து மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்பு
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (18:00 IST)
நீதிபதிகள் குறித்து விமர்சித்து பேசிய கவிஞர் வைரமுத்து மீது சினிமா  ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.


 



சென்னை டி. நகரில் கடந்த மாதம் 12ஆம் தேதி நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியபோது “சமூகத்தை நீதிமன்றம் கவனிப்பதைப்போல, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது என்பதை நீதிபதிகள் மறந்துவிடக்கூடாது.

நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்று, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை நம்மால் ஏற்க முடியவில்லை.என்று நீதித்துறை மற்றும் நீதிபதிகள் குறித்து சர்ச்சைகூறிய கருத்தை தெரிவித்தார். இவருடைய பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சினிமா ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் நீதித்துறை, நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இம்மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு எடுக்க இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணை செய்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், இம்மனுவுடன் இணைத்துள்ள அந்த நிகழ்ச்சிகுறித்த வீடியோ சி.டி.யை போட்டு பார்த்தனர். பின்னர் இம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று அந்த மனுவிற்கு எண்ணிட்டு, விசாரணை பட்டியலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil