Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (13:36 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததும் சசிகலா அதிருப்தியாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓபிஎஸ் பக்கம் அணிதிரள்கின்றனர்.


 
 
நேற்று அதிரடி திருப்பமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் சேர்ந்தார். ரவுடிகள் கும்பலில் இருந்து அதிமுகவை மீட்கவே பன்னீருடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் மேலும் அதிரடியாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க அங்கீகாரம் அளிக்க கூடாது என கூறியுள்ளார். அவைத்தலைவரின் கடிதம் என்பதால் இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே சசிகலாவை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்ததில் சட்ட சிக்கல் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில் அவைத்தலைவரின் இந்த கடிதம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments