Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக -தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி தொடக்கம்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (11:13 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.


 

 
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்ப நிலையில் சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தவர்களே கிட்டத்தட்ட காணாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில் அவ்வப்போது அறிக்கைகளை விட்டு நானும் 'உள்ளேன் அய்யா' என்று கூறி வருபவர் தீபா.
 
ஆனால் தீபாவுக்கு தற்போது சுத்தமாக தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பது அவரது அலுவலகம் வெறிச்சோடியதில் இருந்து உறுதியாகியுள்ளது. இனி தீபாவின் பேச்சே மக்கள் மத்தியில் எடுபடாது என்ற நிலை இருக்கும்போது, தீபாவின் கணவர் என்னால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத வெற்றியை நிரப்ப முடியும் என்று கூறி வருவதை அனைவரும் காமெடியாகத்தான் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
 
இன்று காலை ஜெயலலிதா சமாதியில் மாதவன் புதிய கட்சி துவங்க் இருப்பதாக அறிவித்திருந்தர். மேலும், ஜெயலலிதா, எம்.ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல்வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் இரண்டாக பிரிந்து அடித்துக் கொள்கின்றனர். எனவே, என்னால்தான், அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதனால் புது கட்சி துவங்குகிறேன்" என மாதவன் கூறியிருந்தார்.
 
அதன் பின் இன்று காலை ஜெ.வின் சமாதிக்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய அவர், தன்னுடைய புதிய கட்சி தொடங்கி இருப்பதாகவும், அதற்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக என பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவரது கட்சிக் கொடியையும் அறிவித்தார்.
 
தீபாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபடு காரணமாக, அவர் புதிய கட்சி தொடங்குவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், தீபா தொடங்கிய பேரவையையும் தன்னுடைய கட்சியில் விரைவில் இணைப்பேன் எனவும்,  தீபாவிற்கு எல்லா வகையிலும் துணை நிற்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments