Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பாதித்த பணத்தை பிட்காயினில் போட்ட மதன்? – சரணடைய இருப்பதாக தகவல்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (11:45 IST)
யூட்யூப் ஆபாச பேச்சு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மதன் சரணடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில் பப்ஜி மதனின் தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் மதனின் யூட்யூப் வீடியோவில் மதனுடன் பேசி வந்தது அவர் மனைவி கிருத்திகா என்றும், இந்த வீடியோக்களால் மதன் மாதம் தோறும் ரூ.7 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் தெரிய வந்துள்ளது. சம்பாதித்த பணத்தை பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சியில் மதன் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மதனின் வருமானம், வங்கி கணக்குகளை போலீஸார் ஆராய தொடங்கியுள்ள நிலையில், மதன் சரணடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments