Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி

மு.க.ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி
, வியாழன், 31 ஜூலை 2014 (19:19 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலுக்கு எதிராக தமிழக அரசு தொடந்த நில அபகரிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
சென்னை தேனாம்பேட்டையில் சேஷாத்ரி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை வேணுகோபால் ரெட்டி என்பவர் 2010 ஆம் ஆண்டு விற்றார். இந்நிலையில் திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் மிரட்டலின் காரணமாகவே தான்நிலைத்தை விற்றதாக ஷேஷாத்ரி காவல்துறையில் புகார் கொடுத்தார்.
 
அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது மு.க. ஸ்டாலினுடன் சமரசம் செய்வதாக சேஷாத்ரி ஒப்புக் கொண்டதை அடுத்து வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.
 
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு  இன்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் ரஞ்சனா பி.தேசாய் மற்றும் என்.வி.ரமணா விசாரித்தனர். அப்போது, மு.க. ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளாக இருப்பதால் வழக்கை முடிக்க கூடாது என தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
 
எனினும் முடிந்த போன வழக்கை அரசியல் உள்நோக்கம் காரணமாக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக ஸ்டாலின் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil