Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிலும் ரயில்வே தேர்வு எழுதலாம்: மீண்டும் திமுகவுக்கு கிடைத்த வெற்றி!

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:38 IST)
ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதேபோன்ற ஒரு அறிவிப்பை தபால்துறை அறிவித்திருந்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் போட்டி தேர்வை எழுதலாம் என தபால் துறை பணிந்தது
 
இந்த நிலையில் ரயில்வே துறையின் இந்த அறிவிப்புக்கும் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் ரயில்வே துறைக்கும் மத்திய அரசுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என  ரயில்வே வாரியம் சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளது. ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வு கேள்வித்தாளை ஆங்கிலம், இந்தியில் மட்டும் தயாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
 
ரயில்வே துறையின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ரயில்வேயில் துறைசார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி  என்றும், தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments