Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி வெற்றி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (14:46 IST)
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
உத்திரபிரதேச மாநிலமான கோரக்பூர், புல்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முடிவில் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் 21000 வாக்குகள் வித்தியாசத்திலும், புல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
 
இந்த வெற்றி தொடர்பாக அவர்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 
 
“ இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்த அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி எதிர்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்த மைல்கல்லாக அமைந்துள்ளது. மக்கள் திரும்பவும் ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவை உயர்ந்தவை என்று நிரூபித்து உள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments