Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.கே. நாராயணன் மீது செருப்பு வீசி தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

எம்.கே. நாராயணன் மீது செருப்பு வீசி தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
, வியாழன், 5 நவம்பர் 2015 (11:43 IST)
முன்னாள் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.


 
சென்னையிலிருந்து வெளியாகும் தி ஹிந்து நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, ஹிந்து மையம் என்ற அமைப்பு சார்பாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் மியுசிக் அக்காடாமியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்எம்.கே.நாராயணன், சந்திரகாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்நிலையில், இந்த கருத்தரங்கில் எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதருக்காக மேடையில் இருந்து இறங்கி  வெளியே வந்தார் அப்போது, அவரை நெருங்கி வந்த ஒரு நபர், செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனே அந்த நபரைப் பிடித்துத் தள்ளி, அவரிடம் இருந்து நாராயணனை காப்பாற்றினார்.

பின்பு, அவர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.  நாராயணனை தாக்கியவர் புதுக்கோட்டைடைச் சேர்ந்த பிரபாகரன் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சைதாப்பேட்ட காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 
இதனை தொடர்ந்து, பிரபாகரனை இன்று அதிகாலையில் நீலாங்கரையில் உள்ள சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனாவின் வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil