Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடிப்போன கணவர் தியாகுவை சேர்த்து வைக்க கோரி பாடலாசிரியர் தாமரை போராட்டம்

ஓடிப்போன கணவர் தியாகுவை சேர்த்து வைக்க கோரி பாடலாசிரியர் தாமரை போராட்டம்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (15:32 IST)
பிரபல திரைப்பட பாடலாசிரியர் தாமரை, பிரிந்து சென்ற அவரது கணவர் தியாகுவுடன் சேர்த்து வாழ கோரி, தியாகு வசிக்கும் வீட்டின் முன்னர் போராட்டடம் நடத்திவருகிறார்.
 
'மின்னலே' படத்தில் 'வசீகரா' என்று தொடங்கம் பாடல்; 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கண்கள் இரண்டால்';  'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படத்தில் 'மல்லிகை பூவே மல்லிகை பூவே'; 'தெனாலி' படத்தில் 'இன்சிரங்கோ இன்சிரங்கோ'; 'வாரணம் ஆயிரம்' படத்தில் 'ஒன்ன ஒன்ன தேடி வந்த' உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 
 
பாடலாசிரியர் தாமரைக்கும், எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001 ஆம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் சமரன் என்ற ஆண் குழந்தை உள்ளார். சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார். 
 
இந்நிலையில் இன்று காலை கவிஞர் தாமரை தனது மகன் சமரனுடன் சூளைமேடு பெரியார் பாதை முல்லை தெருவில் கணவர் தியாகு வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டு வாசலில் மகனுடன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். 
 
அப்போது அவர் செய்தியாள்களிடம் கூறியதாவது:–
 
எனக்கும் தியாகுக்கும் 14 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். தமிழ் உணர்வு போராட்டங்களுக்கு அவருக்கு பக்கபலமாக இருந்தேன். கடந்த வருடம் திடீரென ஒரு திருடன் மாதிரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
 
அதன்பிறகு வீட்டுக்கு வரவே இல்லை. என்னை பிரிந்ததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன். தியாகு மீண்டும் வீட்டுக்கு வந்து என்னோட வாழ வேண்டும்.
 
2012 ஆம் ஆண்டு ஒரு முறை இதேபோன்று என்னை விட்டு ஓடிவிட்டார்.
 
இதற்கு ஒரு முடிவு தெரியாமல் இங்கு இருந்து கிளம்பமாட்டேன். தமிழ் அமைப்பினர் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு தாமரை கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil