Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லக்கானிக்கு லக்கு? புதைந்து கிடக்கும் நிஜங்கள்

லக்கானிக்கு லக்கு? புதைந்து கிடக்கும் நிஜம்

லக்கானிக்கு லக்கு? புதைந்து கிடக்கும் நிஜங்கள்

கே.என்.வடிவேல்

, வியாழன், 26 மே 2016 (12:47 IST)
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உயர் பதவி வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

 
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு நிர்வாகம் தேர்தல் ஆணையம் வசம் சென்றது. இதனையடுத்து, அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து அதிமுக அரசு அமைந்து முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இதனையடுத்து ஆளும்கட்சி ஆதரவு அதிகாரிகள் மீண்டும் அதே பதவிக்கு திரும்பி வருகின்றனர்.
 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேர்மையான முறையில் செயல்பட்டார் என்பது தமிழக அதிகாரிகள் தரப்பு வாதம். இதனால் அவர் மீதான கிரேஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிகரித்துள்ளது.
 
இதனையடுத்து, அவரது அருமை பெருமைகளை முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாம். லக்கானிக்கு லக்கு விரைவில் காத்திருக்கு என அதிகாரிகள் தரப்பில் குஷியாக சொல்கிறார்கள்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: தண்டவாளத்தில் வீசிய கொடூரர்கள்