Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (07:34 IST)
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது. 
 
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.5 ரூபாய் குறைந்து ரூ.1,756-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து உயர்ந்துக்கொண்டே செல்வது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100வது ராக்கெட்.. புவிவட்டப் பாதையில் செல்வதில் பின்னடைவு?

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுடையது.. குறுக்க யார் இந்த சிக்கந்தர்? - எச்.ராஜா கேள்வி!

ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்று மட்டும் 680 ரூபாய் குறைவு..!

டிரம்ப் எதிராக வழக்கு தொடர்வோம்.. வரி உயர்வு குறித்து சீனா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments