மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:08 IST)
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்து தாழ்வு தற்போது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் இந்திய பெருங்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது என்பதும் இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கு 455 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மற்றும் சென்னை எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments