Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! எங்கெல்லாம் மழை பெய்யும்?

Siva
சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:19 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கலிங்கப் பட்டணத்திற்கு அருகில் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .

இதன் காரணமாக தமிழகம், புதுவை, ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments