வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Siva
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (08:09 IST)
வங்கக் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
 
திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட் 13-ம் தேதியும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 14-ம் தேதியும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments