Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை முக்கிய அறிவுறுத்தல்..!

Siva
திங்கள், 9 டிசம்பர் 2024 (07:14 IST)
நாளை அதாவது டிசம்பர் 10ஆம் தேதி முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகி இருப்பதை அடுத்து இன்னும் 24 மணி நேரத்தில் அந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதை பார்த்தோம்.
 
சமீபத்தில் ஃபெஞ்சன் புயல் கரையை கடந்து சில மாவட்டங்களை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கிய நிலையில், அதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 10ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்! - திருச்சியில் அமைச்சர் KN நேரு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து!

ஒரு வாரத்தில் 40 பேர், ஓராண்டில் 569 பேர் சிறைபிடிப்பு, நிரந்தரத் தீர்வு எப்போது? அன்புமணி கேள்வி..!

உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதில்லை: நடிகை கஸ்தூரி

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் திருமாவளவன்.. என்ன காரணம்?

இரவு ரோந்து பணியின் போது ‘புஷ்பா 2’ படம் பார்த்த உதவி கமிஷனர்.. மேலதிகாரிக்கு தெரிந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments