கணித்ததை விட முன்னரே உருவானது காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யுமா?

Mahendran
திங்கள், 7 ஏப்ரல் 2025 (13:31 IST)
வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், எதிர்பார்த்ததற்குமுன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. 
 
தெற்கு வங்கக் கடலில் வளிமண்டல வேலைக்கு சுழற்சி காற்று நிலவுகளால், வங்கக் கடலில் இன்று அல்லது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 
ஆனால் தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்துக்கு முன்னரே உருவாகியுள்ளதாகவும், இன்று முதல் ஏப்ரல் 12 வரை தமிழகத்தில் சில இடங்களில்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட்  வரை வெப்பநிலை பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments