Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலிஸிடம் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி – எடுத்த அதிர்ச்சி முடிவு !

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:28 IST)
போலிஸார் மற்றும் கணவனிடம் சிக்கிய கள்ளக்காதல் ஜோடியினர் யாரும் எதிர்பாராத விதமாக விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் குணசேகரன் மற்றும் கவிதாமணி. இந்நிலையில் குடும்பத்தில் விரிசல் விழும் விதமாக கவிதாமணிக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரோடு தொடர்பு இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஊரைவிட்டுத் தலைமறைவாகி உள்ளனர். இது சம்மந்தமாக கவிதாமணியின் கணவர் ஜெயக்குமார் நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலிஸார் இருவரையும் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஜெயக்குமார் மற்றும் கவிதாமணி இருவரும் சென்னை, கோயம்பேட்டுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பகுதியில் வசித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சென்னைப் போலிஸ் அவர்கள் வீட்டுக்கு விசாரித்த போது ஜெயக்குமார் மட்டுமே அங்கு இருந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது கவிதாமணி சேலத்துக்கு சென்றதாகவும் தற்போது திரும்பி வந்துகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதனால் அவரை அழைத்துக் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்ற போலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் விஷத்தை குடித்துள்ளனர். இதனால் இருவரும் வாயில் நுரைதள்ளி அங்கேயே இறந்துள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத போலிஸார் அவர்களது உடல்களை பலிஸார் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments