Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை கைப்பிடிக்க அல்பமாய் கடிகாரத்தை திருடிய காதலன்!

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (14:06 IST)
காதலியை கரம் பிடிக்க விடிய விடிய போராடி பங்களாவில் புகுந்து ஒரே ஒரு சுவர் கடிகாரத்தை திருடி போலீஸில் சிக்கியுள்ளார் காதலன். 
 
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் செளந்திரபாண்டியன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். 
 
போலீஸார் சிசிடிவியை வைத்து திருட்டில் ஈடுப்பட்ட செல்லதுரை, மைக்கேல் அந்தோணி, விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை செல்லதுரையின் வாக்குமூலம் சிரிப்பாய் இருந்துள்ளது. 
செல்லதுரை கூறியதாவது, நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். காதலித்த பெண்ணை மணக்க அதிக பணம் வேண்டும் என்று மாமனார் கூறினார். எனவே, எனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் திருட சென்றேன். 
 
வீட்டின் பூட்டை நீண்ட நேரம் போராடி உடைத்து, வீட்டிற்குள் புகுந்தோம். பீரோவை திறக்க முயன்றோம் ஆனால் பல மணி நேரமாக முயற்சித்தும் பீரோவை திறக்க முடியவில்லை. 
 
எனவே, வீட்டில் இருந்த சுவர் கடிகாரம் ஒன்றையும், எல்.ஈ.டி. டிவியை எடுத்துக்கொண்டு தப்பித்தோம். கடிகாரத்தை 80 ரூபாய்க்கும், டிவியை 1000 ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments