Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் செவிலியரை ஆசை காட்டி அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த பொறியாளர் கைது

Webdunia
புதன், 19 நவம்பர் 2014 (11:13 IST)
சென்னையில் திருமண ஆசை காட்டி செவிலியரிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த பொறியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். சென்னை முகப்பேரு கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ். பி.இ. முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைப் பார்த்து வருகிறார்.
 
கடந்த வருடம் மதன்ராஜ் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது அங்கு அந்த பெண் செவிலியராக வேலை பார்த்துள்ளார். இதில் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது காதலாக மாறியுள்ளது.
 
இதற்கிடையில் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். உடனே திருமணத்திற்கு வலியுறுத்தியபோது தங்கையின் திருமணம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடச் சொல்லியிருக்கிறார்.
 
இதன் பின்னர் கீதாவை சந்திப்பதை மதன்ராஜ் குறைத்துள்ளார். கீதா திருமணத்திற்கு வற்புறுத்தியபோது திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கீதா தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
 
இந்நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று மதன்ராஜ் மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
 
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் மதன்ராஜை கைது செய்து பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!