டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஆன்லைன் மோசடி அழைப்பு தனக்கு வந்ததாகவும், தேவையில்லாத எந்த லிங்க்-ஐயும் தொடாதீங்க எனவும் நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிலும் பெண்கள் காஸ்டிங் கவுச் போன்ற வன்முறைகளை சந்தித்து வருவதாக அண்மையில் சனம் ஷெட்டி கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, தன்னிடம் மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஆன்லைன் மோசடி அழைப்பு வந்தது. என்னுடைய மொபைல் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளது என்றும், 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
உடனே, நானே பயந்து போய் என்ன சொல்லுறீங்க என்று கேட்டபோது, உங்களுடைய முழு தகவல்களை உடனடியாக எனக்கு தெரிவிக்காவிட்டால் உங்கள் சிம் லாக் ஆகி விடும் என்று கூறினார்கள். அப்போதுதான் எனக்கு தோணுச்சு.
சிம் வாங்கும்போதே நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம், அப்போ ஏன் நம்மளுடைய விவரங்களை கேட்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பாடாக கூறிய அவர், இது மோசடி கால் என்று சுதாரித்து கொண்டார்.
இதேபோல், ஒரு மோசடி தனது நண்பருக்கு நடந்ததாக விவரித்தார். ஆனால், என்னுடைய நண்பர் அவர்கள் அனுப்பிய லிங்கை Click பண்ண அடுத்த செகண்ட் Phone -அ Hack பண்ணிட்டாங்க. இது போன்ற மோசடி நபர்களிடம் வரும் எதையும் அணுக வேண்டாம்.
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கவனமாகே இருங்க, தேவையில்லாத எந்த லிங்க்-ஐயும் தொடாதீங்க என்று நடிகை சனம் ஷெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.