Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரிகள் வேலைநிறுத்ததால் அட்டைபெட்டி தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் !

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (19:31 IST)
தமிழக அளவில் மட்டுமில்லாமல்., இந்திய அளவிலும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் கடந்த 20ஆம் தேதி தொடங்கி, இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது.


பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் ஆங்காங்கே குடிசைத்தொழிலாக இருந்து வரும் அட்டைப்பெட்டி தொழிலானது., தற்போது தான் கம்பெனி வரை வளர்ந்துள்ளது.

இந்நிலையில், அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழில் ஆனது ஆடிக்காற்றில் முடங்கும் நிலையில், அட்டைப்பெட்டிகளை தயாரித்து வெயிலில் போட்டால் அடிக்கும் காற்றில் பறக்கும் என்பதினால், வேலையில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் தொழிலில் ஈடுபடுவதே சிரமம்,

இந்நிலையில், ஆடிக்காற்றில் ஏற்கனவே முடங்கிய அட்டைப்பெட்டித்தொழில் ஆனது,. தற்போது இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தினால் 4 நாளாக சுமார் ஆயிரக்கணக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தற்போது சுமார் 100 க்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமே

இந்த அட்டைப்பெட்டித் தொழிலில், ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மற்றும் கரூரில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தயார் செய்யப்படும் அட்டைப்பெட்டிகளை வைத்தே, டெக்ஸ்டைல் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்களும் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சுமார் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வரும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், ராம் மெட்டீரியல் என்றழைக்கப்படும் அட்டைப்பெட்டி தயாரிப்பிற்கான மூலப்பொருட்களும் தேவைப்படுவதால் முற்றிலும் முடங்கும் நிலையில் அட்டைப்பெட்டித்தொழில் உருவாகி வருவதாகவும், தற்போது வரை தயாரிக்கப்பட்ட அட்டைபெட்டிகள் வெளியூர் செல்ல முடியாததினால் அப்படியே தேங்கி கிடக்கிறது.,

அதற்கு பில் போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் தொழிலாளர்களுக்கு தற்போது வரை வேலைபார்த்தவர்களுக்கு, கூலி தரமுடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து அட்டைப்பெட்டி தொழிலாளர்களை காக்க வேண்டுமென்றும் கரூர் மாவட்ட அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

                                                                                                                      - Aanathakumar

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments