Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிறிய டீசல் விலை- மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:41 IST)
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
இருப்பினும் இதனை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 
 
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 27 காசுகளும் டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து உள்ளன. அதாவது பெட்ரோல் விலையை விட டீசல் விலை 5 காசுகள் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.98 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 27 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 91.98 ரூபாய் என விற்பனையாகிறது. 
 
அதேபோல், சென்னையில் நேற்று டீசல் லிட்டர் 85.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85.63 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. 
 
எனவே, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் இம்மாதம் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments