Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தல் 2024: சத்குரு வாக்களித்தார்! ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்!

Prasanth Karthick
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (10:44 IST)
கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.


 
தமிழகத்தில் முதல் கட்டமாக  பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று (19.04.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில்  அமைக்கப்பட்டிருந்த  வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்குகளை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

அதே போன்று ஈஷா யோக மையத்தை சார்ந்த நூற்றுக்கணக்கான பிரம்மச்சாரிகள் தங்களின் வாக்கினைப் பதிவு செய்தனர். அவர்களுடன் ஈஷா முழு நேர தன்னார்வலர்கள், ஆசிரமாவாசிகள் என ஈஷாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.

முன்னதாக தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த சத்குரு அவர்கள் "நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையில் எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments