உள்ளாட்சி தேர்தல் தேதி: அட்டவணையை இன்று தாக்கல் செய்யுமா ஆணையம்?

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (06:41 IST)
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவால் இன்று உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உள்ளது. இன்று தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்றால் தமிழக தேர்தல் ஆணையருக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால் கடந்த சில நாட்களாக தேர்தல் அலுவலக அதிகாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேர்தல் தேதி குறித்த ஆலோசனை செய்தனர்.
 
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், இருப்பினும் வார்டு வரையறை பட்டியல், இட ஒதுக்கீடு பட்டியல் தயாரிப்பு ஆகிய பணிகளை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டோ நடத்த தேர்தல் ஆணையம் அட்டவணையை தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடத்தும் வகையில், அட்டவணை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இன்னும் ஒருசில மணி நேரங்கள் பொறுத்திருந்து தேர்தல் ஆணையத்தின் அட்டவணையை பார்க்கலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments