Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி திருவிழா – திருவாரூரில் விடுமுறை அறிவிப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (10:32 IST)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்காவில் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் இந்த தர்காவில் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு பல வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொள்வர்.

இந்த ஆண்டில் எதிர்வரும் டிசம்பர் 15ம் தேதி கந்தூரி திருவிழா நடைபெற உள்ளது. மிகவும் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் சாதி, மத பேதமின்றி பலரும் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் 8ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments