மூன்று மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் – ஈ பி எஸ் வாக்குறுதி !

Webdunia
ஞாயிறு, 5 மே 2019 (18:00 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது குறித்து சென்னை நீதிமன்றத்தில் ஜெயா சுகின் என்பவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்துப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதில் பதில் மனுவைத் தாக்கல் செய்த கூடுதல் தலைமைச் செயலாளர் ‘தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம். மேலும் வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன. . எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பியபோது ’ உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக எந்த பயமும் இல்லாமல் தயாராக உள்ளது. இன்னும்  மூன்று மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments