Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் பாணியில் வாலண்டியராக வந்து மாட்டிய சேரன்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (23:06 IST)
சமீபத்தில் நடிகர் விஷால் பெங்களூரில் ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது காவிரியில் தண்ணீர் கேட்பது தமிழரின் உரிமை என்று ஆவேசமாக பேசினார். அவர் பேசிய இரண்டு நாட்களில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது. உடனே விஷால் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதற்கு நன்றி என்று கர்நாடக அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதை கடந்த இரண்டு நாட்களாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.



 
 
இந்த நிலையில் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி பிரச்சனைக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் கூறியபோதிலும் இயக்குனர் சேரன் ரஜினியையும், ரஹ்மானையும் குறிப்பிட்டு நீங்கள் இருவரும் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே ரஜினி நேற்றிரவு தனது டுவிட்டரில் தமிழக அரசுக்கு வரிப்பிரச்சனையை விரைவில் தீர்க்கும்படி ஒரு வேண்டுகோளை விடுத்தார்
 
இந்த நிலையில் ''ஜிஎஸ்டி மற்றும் திரையரங்குகள் மூடல் சம்பந்தமாக நான் கூறுவதைவிட சினிமாத் துறையில் நீண்ட வருடங்கள் இருப்பவர்கள் கூறினால் சரியாக இருக்கும் என்ற நோக்கத்தில் 'ஜிஎஸ்டி சம்பந்தமாக எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ரஜினியிடம் கூறினேன். அவர் என்னுடைய வேண்டுகோளை ஏற்று டுவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்' என்று கூறினார். காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக சேரனின் கூற்று உள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments