Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவோர பானிபூரி கடைகளுக்கு பதிவு உரிமம் கட்டாயம்: உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு!

Siva
வெள்ளி, 12 ஜூலை 2024 (09:06 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி, தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உட்பட சில நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறிய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக வெளியாகி செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் என்றும் அதில் கெமிக்கல்கள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்தே அதிரடி சோதனை நடந்தது.

இந்த நிலையில் பானிபூரி மற்றும் தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் பதிவு உரிமை கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. பானிபூரி விற்பனை செய்வோருக்கு சுகாதாரமான முறையில் பானிபூரி தயாரிப்பது மற்றும் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமை பெறுதல் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பானிபூரி வியாபாரிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments