Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் டிரம்ப்பை கூட சந்திக்கட்டும் - காண்டான ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:35 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னைக்கு வந்து நடிகர் கமல்ஹாசனை சந்தித்து உரையாடினார்.


 

 
சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இளைஞர்களுக்கு மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.  
 
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினார்
 
இந்நிலையில், இதுபற்றி ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “இதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?.  கமல்ஹாசன் டிரம்ப்பை கூட சந்தித்து பேசட்டும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” எனக் கூறினார்.
 
சமீப காலமாக, ஜெயக்குமார்  யாரை கிண்டல் செய்வதென்றாலும் டிரம்பின் பெயரைத்தான் பயன்படுத்துகின்றனர். தினகரன் டிரம்பை கூட பதவியிலிருந்து நீக்குவார் எனக் கூறினார். அதேபோல், டிரம்ப் வெற்றி பெற்றதற்கு கூட ஓ.பி.எஸ் நானே காரணம் எனக் கூறுவார் என கிண்டலடித்திருந்தார். 

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments