Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் சட்டம் ஒழுங்கு: கூடுதலாக இரண்டு ஐஜிக்கள் நியமனம்!

சென்னையின் சட்டம் ஒழுங்கு: கூடுதலாக இரண்டு ஐஜிக்கள் நியமனம்!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (16:39 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் சூழலில் சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதலாக இருண்டு ஐஜிக்களை நியமித்து காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


 
 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையும் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலேவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
 
காவல்துறை தரப்பில் இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதலாக சாரங்கன், ஜெயராமன் என்ற இரண்டு ஐஜிக்களை நியமித்துள்ளார் காவல்துறை தலைவர்.
 
மேலும் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார். அனைத்து காவலர்களும் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். குறைந்த அளவிலான காவலர்கள் காவல் நிலையத்தில் இருக்கலாம் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறாரா? அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நேற்று இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

பொங்கலுக்கு பின் படிப்படியாக மீண்டு வரும் பங்குச்சந்தை.. இன்றைய நிலை என்ன?

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு: மறுதேதி அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments