Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (14:59 IST)
நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா என்ஜீனியரிங் கல்லூரி மதுரையை அடுத்த சிவரக் கோட்டையில் உள்ளது.

இந்தக் கல்லூரிக்காக அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 செண்ட் நிலத்தை மு.க.அழகிரி அபகரித்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி மதுரை புறநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையில் புகார் செய்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மு.க. அழகிரிமீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் மு.க. அழகிரி மதுரை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு 3 ஆம் தேதி வரை இடைக் கால முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றகிளை உத்தர விட்டு இருந்தது.

மு.க. அழகிரிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில், அவர் மதுரை 1 ஆம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந் தார்.

இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் திரிவேணி முன்பு 2 நபர் முன்ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil