Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ என்ன கோழையா? - ஆர்.ஜே. பாலாஜியிடம் எகிறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (16:44 IST)
லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவர் பேசிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ என்ற வசனத்தை அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதோடு இந்த வசனம் பாடலாகவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

 
இந்நிலையில், ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை, ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் கேலி செய்துள்ளார்கள். அந்த காட்சியில் ஜீ.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி மற்றும் சில நடித்திருந்தனர்.
 
இதனால் கோபம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.ஜே. பாலஜியிடம் “என்னுடைய நிகழ்ச்சியை நீங்கள் கிண்டல் செய்வதற்கு முன்னால் உங்களுடைய படங்களை நீங்கள் விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அம்மணி படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், எனக்கென்று ஒரு தனி மரியாதையை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  
 
சென்னை வெள்ளத்தின்போது விளம்பரத்துக்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக காட்டிக் கொண்டார் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? இல்லையா? ஆனால் நான் அப்படி சொல்லும் ஆள் கிடையாது. நான் மற்றவர்களை மதிக்கக்கூடியவள்” என்று பதிவிட்டார்.
 
ஆனால் பாலாஜி எந்த பதிலும் கூறாமால் அமைதியாக இருந்தார். எனவே மீண்டும் பாலாஜியை வம்புக்கிழுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் “ இன்னும் ஏன் பதில் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது இது கோழைத்தனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது: ஆர்எஸ் பாரதி

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments