மனைவிக்கு கார் ஓட்ட பழகியபோது விபத்து! பரிதாபமாக பலியான சிறுமி

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (15:20 IST)
சென்னையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு கார் ஓட்ட பழகி கொடுத்த கொண்டிருந்தபோது அந்த கார் எதிர்பாராதவிதத்தில் சிறுமி மீது மோதியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த டெனி என்பவர் தனது மனைவி ப்ரித்திக்கு கார் ஓட்ட கற்று கொடுத்து கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ப்ரித்தி திடீரென சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பவித்ராவின் மீது மோதினார்.

இதில் பலத்த காயமடைந்த பவித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை தொடங்கும் முன்பே மரணம் அடைந்தார். இந்த நிலையில் பவித்ரா மீது காரை ஏற்றிய டெனி, ப்ரித்தி தம்பதியை அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர்.   ப்ரித்தி கார் ஓட்ட பயின்று கொண்டிருந்தபோது திடீரென பதட்டத்தில் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுமி மீது மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments