தமிழக முதல்வருடன் பாஜக எல்.முருகன் திடீர் சந்திப்பு: என்ன பேசினார்கள்?

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:39 IST)
கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பேட்டிகளின் மூலம் சொற்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் சந்தித்தார்.
 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது விநாயகர் சிலை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று எல்.முருகன் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் முதல்வருடனான சந்திப்பு முடித்து விட்டு வெளியே வந்த எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது ’விநாயகர் சிலைகளை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இதுகுறித்து தனது முடிவை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்
 
மேலும் இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments