ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (13:32 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா சென்று முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார் என்றும் தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கப் போகிறார் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் எல் முருகன்  கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே முதல்வர் ஸ்பெயின் சென்று எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும் என்றும் அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களை அவர் சந்திக்க உள்ளார் என்பதையும் வெளிப்படையாக கூற வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர்கள் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
மேலும் கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ விசாரித்தால் மட்டுமே இந்த சம்பவத்தில் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது என்பதையும் முழு விவரங்களை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். எல் முருகனின் இந்த கேள்விகளுக்கு  தமிழக முதல்வர் சார்பில் பதில் அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

உங்கள் மீதே பாலியல் புகார் கொடுப்பேன்.. காதலனுக்காக தந்தையை மிரட்டிய 17 வயது மகள்..!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு குவியும் லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments