Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜர் பெயரை சொல்லி பிச்சை எடுக்கும் காங்கிரஸ்: குஷ்பு ஆவேசம்

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (14:28 IST)
காமராஜர் பெயரை கடைசி வரை காங்கிரஸ் கட்சி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நடிகை குஷ்பு காரசாரமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்பு அதில் பேசிய போது ’தமிழகம் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தினம் திமுக பயத்திலேயே இருக்கிறது என்றும் கூறினார்

கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பத்து ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி கடைசிவரை சொந்த காலில் இருக்க முடியாதது நிக்க முடியாமல் காமராஜரின் பெயரைச் சொல்லி பிச்சை எடுக்கிறது என்றும் கூறினார்.

மேலும் திமுக அதிமுக என மாறி மாறி கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என்றும் தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு பாருங்கள் என்றும் கூறினார்

மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் தற்போது தான் குற்றவாளி பிடிபட்டுள்ளார், இனி ஒவ்வொரு பெயராக வெளியே வரும் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments