Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில கட்சியே எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லையே: குஷ்பு

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (12:42 IST)
அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை மாநில கட்சியே ஏற்றுக்கொள்ளாத நிலையில் தேசிய கட்சியான பாஜக எப்படி ஏற்றுக் கொள்ளும் என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்
 
சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர்தான் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இது அதிமுகவை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டாக்டர் ராம்தாஸ் அறிவிப்பார் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக கூட்டணியில் உள்ள மாநில கட்சியாக பாமக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் பாஜக எப்படி அவரை ஏற்றுக் கொள்ளும் என்றும் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார் குஷ்புவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments