Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

Mahendran
வெள்ளி, 22 நவம்பர் 2024 (10:54 IST)
திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உறுதியாக இருப்பார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்றும், அப்படியானால் அதற்கான வியூகம் என்ன என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குஷ்பு கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், கூட்டணி குறித்து இப்போதே பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும், இன்னும் கால அவகாசம் இருப்பதால் தேர்தல் வரும் போதே அணிகள் எவ்வாறு மாறும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

"எப்படி கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எங்களை விட மோடி, அமித்ஷாவுக்கு தெரியும். தமிழ்நாட்டில் அவர்கள் வகுக்கும் வியூகம் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.

மேலும், "நாளை வெளியாக போகும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணி வெற்றியை பெறும்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments