Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என கூறிய விவகாரம்: குஷ்பு விளக்கம்

Mahendran
செவ்வாய், 12 மார்ச் 2024 (10:09 IST)
தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என்று பாஜக நிர்வாகி குஷ்பு பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான  குஷ்பு நேற்று  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, ‘தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? போதைப்பொருளுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?  என கேள்வி எழுப்பினார்.

இந்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என  குஷ்பு கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவு 'பிச்சை' என்று முரசொலி மாறன் சொன்னார். பெண்கள் பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்ன போது  யாரும் கேட்கவில்லை. ஆனால் ஒரு கருத்தை கூறினால் மட்டும் அதை திரித்து நெகட்டிவ் கருத்தை பரப்பி வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் அவர் திமுக அரசை கேட்டு கொண்டுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஏதாவது பலன் கிடைக்க வேண்டும்: விஜய் சேதுபதி..!

மகா கும்பமேளா நிர்வாகத்தை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்..

ஜப்பான் மீது அணுகுண்டு வீசி 80 ஆண்டுகள் நிறைவு.. டிரம்புக்கு அழைப்பு..!

பிப்ரவரி 1 முதல் ஓலா, உபேர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments