Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வீடு தாக்கப்பட்ட போது சாப்பிடுகிறேன் என்று சொன்னவர் ஸ்டாலின் – குஷ்பு ஆவேசம்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (17:04 IST)
நடிகை குஷ்பு பெண்கள் உரிமைப் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார்.

சினிமாவில் இருந்து அரசியலில் காலடி எடுத்து வைத்த நடிகை குஷ்பு முதலில் திமுகவில் சேர்ந்தார். அங்கிருந்த சிலருக்கு அவரின் வளர்ச்சி பிடிக்காததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தார். அங்கு அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அங்கிருந்து சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவுக்கு தாவியுள்ளார்.

இந்நிலையில் இப்போது நடிகை குஷ்பு திமுக மற்றும் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதன் படி ‘பெண்கள் பாதுகாப்பு குறித்தோ, ஊழல் குறித்தோ பேசுவதற்கு திமுகவுக்கு உரிமையில்லை. நான் திமுகவில் இருந்த போது என் வீடு தாக்கப்பட்டது. இதுபற்றி ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தேன். அதற்கு ’நான் இப்போது சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். என்னால் வர முடியாது’ எனக் கூறினார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச திமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது. சொந்த கட்சியை சேர்ந்த பெண்ணையே காப்பாற்ற முடியாதவர் மற்ற பெண்களை எப்படி காப்பாற்றுவார்? தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்?‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments