Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாத ஊராக மாறிய கும்பகோணம்....

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:45 IST)
நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, டாஸ்மாக்கே இல்லாத ஊராக  கும்பகோணம் மாறியுள்ளது.


 

 
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மூலம் ஏராளமான விபத்து ஏற்படுவதால், அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, அந்த கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஆனால், அதற்கு அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அவகாசம் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. 
 
எனவே, தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன.  இதில் கும்பகோணத்தில் மட்டும் 23 கடைகள் மூடப்பட்டன. கோவில் நகரம் என அழைக்கப்பட்ட கும்பகோணத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். 
 
இந்நிலையில், அந்த ஊரில் செயல்பட்டு வந்த 23 கடைகளும் மூடப்பட்டதால், டாஸ்மாக்கே இல்லாத நகரம் என்ற சிறப்பை தற்போது பெற்றுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments