Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ரஷ்யா கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம்: புறக்கணித்த தமிழக அரசு

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (16:49 IST)
கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பல்வேறு துறைகளில் ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தியாகின. 

 
இதில், கூடங்குளத்தில் 3, 4ஆம் அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். மேலும் இந்தியாவின் ஓ.என்.சி நிறுவனம் ரஷ்யவின் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
 
ரூ.36,747 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த கட்டுமானப்பணிகள் 2022–ம் ஆண்டு நிறைவடைந்து, மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா - ரஷ்யா இடையே பொருளாதாரம், பாதுகாப்பு துறையில் வருங்காலங்களில் ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்தார். மேலும், தற்போது செயல்படும் 2 அணு உலைகள் உட்பட மொத்தம் 8 அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படும் என மோடி தெரிவித்தார். 
 
இவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த முடிவுகளை ரஷ்யா மற்றும் இந்தியா கையெழுத்திடும் போது, இதனை தமிழக அரசு சற்றும் கண்டுக்கொள்ளாமல் உள்ளது.
 
தமிழக அரசின் இந்த நடவடிக்கை எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் யாருமே காணொலி காட்சியில் இணைந்து திட்டத்தை தொடங்கி வைக்க முன்வரவில்லை. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரணத்தால் தான் இவ்வாறு செயல்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments