தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் அறிவிப்பு

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (21:50 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் இதற்கான ஆலோசனை இன்று மாலை முதல் டெல்லியில் நடந்து வருவதாகவும், இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் இன்று அவசரமாக டெல்லி சென்றதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர்களும் நியமிக்காப்பட்டுள்ளனர்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி என்பதை காங்கிரஸ்காரர்களே பலர் எதிர்பார்க்கவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், குஷ்பு ஆகியோர்களில் ஒருவர் நியமிக்க வாய்ப்பு அதிகம் என செய்திகள் கசிந்த நிலையில் திடீரென  கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments