Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது பெரிய கட்சி நாங்கதான்.. பாஜக இல்ல..! – கே.எஸ்.அழகிரி வாதம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (12:18 IST)
நகர்புற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மூன்றாவது பெரிய கட்சியாகியுள்ளது என அண்ணாமலை கூறியதை கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் திமுக பெருவாரியான பகுதிகளில் வென்று நகராட்சி, மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் பல்வேறு இடங்களில் வென்றுள்ளன.

இந்நிலையில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான். பாஜக அல்ல. பாஜக பெரிய கட்சி என்றால் 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கட்டும். தனித்து போட்டியிடுமா என்பதை அண்ணாமலைதான் தெளிவாக சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments