Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்காக அதிமுகவிற்கு வாக்களிக்க கூடாது? அழகிரி பரபரப்பு பேட்டி!!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (20:00 IST)
அதிமுக என்ற பெயரில் பாஜக தான் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறது என கே.எஸ்.அழகிரி பரப்பரப்பு பேட்டி. 

 
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை வேளச்சேரியில் இருந்து நான் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளேன். வருகிற ஏப்ரல் 3-ம் தேதி மதுரையில் பிரச்சாரம் முடிவடைகிறது.
 
இந்த பிரச்சாரத்தில், முதல்வர் அசோக் கெலாட், மல்லிகா அர்ஜீன் கார்கே, கர்நாடக முன்னாள் தலைவர் சித்தராமையா மற்றும் அவரது தோழர்கள், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தேர்தலில் முக்கியமான நோக்கம் தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டுமா டெல்லி ஆள வேண்டுமா என்பது தான். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தால் திமுக தலைமையில் ஆட்சி அமையும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார். 
 
எதற்காக அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்றால், தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசால் பாதுகாக்க முடியவில்லை. இயற்கை சிற்றம் வரும் போது மத்திய அரசிடம் இருந்து போதிய நீதியை வாங்கவில்லை‌. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று மத்திய அரசு சொல்கிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை பாஜக அதனை சிதைக்க நினைக்கிறது. அதிமுக என்ற பெயரில் 234 தொகுதியிலும் பாஜக தான் போட்டியிடுகிறது.
 
சமஸ்கிருதத்திற்கு 300 கோடியும், செம்மொழியான தமிழுக்கு மிக குறைவான தொகை ஒதுக்கியுள்ளது. விசாரணைக்கு அஞ்சி அதிமுக மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதில்லை. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். 
 
வங்கி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை தெரிவித்து கொள்கிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது வருவார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments