Webdunia - Bharat's app for daily news and videos

Install App

84 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே திறக்கப்படும் KRS அணை! காவிரியில் வெள்ளப்பெருக்கு!

Prasanth K
புதன், 25 ஜூன் 2025 (09:48 IST)

தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான காவிரியில் கேஆர்எஸ் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் டெல்டா பகுதிகள் காவிரி ஆற்றின் தண்ணீரை நம்பியே உள்ளன. காவிரி ஆறின் தண்ணீரோ கர்நாடக அணைகளை நம்பி உள்ளது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடகாவில் பெய்யும் கனமழையால் நீர்வரத்து அதிகரிக்கும். கேஆர்எஸ் அணையில் நீர் வரத்து அதிகரிக்கும்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும்.

 

பொதுவாக இந்த அணை ஆகஸ்டு மற்றும் அதற்கு பிந்தைய மாதங்களில்தான் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்ட நிலையில் அணையில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் 84 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கேஆர்எஸ்ஆர் அணையில் இருந்து ஜூன் மாதமே தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

 

வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருக்கும் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,815 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments