Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதில் பூ சுற்றுவது போல பொய்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (17:45 IST)
காதில் பூ சுற்றுவது போல பொய் பேசுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
செந்தில் பாலாஜிக்கு நம்முடைய முக்கியமான கேள்விகள்:
 
1. மது அருந்துவதற்கும், திண்பண்டங்கள் விற்பதற்காகவும் அனுமதிக்கப்பட்ட பாரில் மது விற்கப்பட்டது எப்படி?
 
2. பகல் 12.00 மணிக்கு தானே டாஸ்மாக் கடை திறந்திட வேண்டும்? ஆனால், விடிய விடிய அந்த பார் திறந்து இருந்தது எப்படி?
 
3. அரசுக்கு எந்தவிதமான குத்தகை கட்டணமும் செலுத்தாமல் அந்த பார் இயங்க அனுமதித்தது யார்?
 
4. இந்த பாருக்கு வந்த மதுபானங்கள் யாரால், எங்கு உற்பத்தி செய்யப்பட்டவை?
 
5. அப்பாவி தொழிலாளர்கள் இரண்டு பேர் மரணமெய்தி இருக்கிறார்கள். இன்னும் காதில் பூ சுற்றுவது போல பொய்யைச் சொல்ல போகிறாயா? அல்லது மூன்று நாள் கழித்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து அறிக்கை விடப் போகிறாயா?
 
6. தமிழ்நாடு அரசே எத்தனை தமிழ் மக்களின் உயிரை பலிவாங்க சட்ட விரோத பார்களை மற்றும் கள்ளத்தனமாக மது விற்க அனுமதிக்க போகிறீர்கள்?
 
மு.க. ஸ்டாலின் அவர்களே, மரக்காணத்திற்கு ரூ 10 லட்சம் கொடுத்தீர்கள்; தஞ்சையில் ரூ 20 லட்சம் கேட்கிறார்கள், வழங்குங்கள். இவ்வளவு சம்பவத்திற்கு பின்பும் இன்னும் இந்த பதவி தேவையா? சுயமரியாதையுடன் பதவியை விட்டு விலகுங்கள்; டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்.
 
தமிழக மக்கள் தொடர்ந்து பொறுத்துக் கொண்டே இருக்க மாட்டார்கள்; பொங்கி எழுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.!
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

அடுத்த கட்டுரையில்
Show comments